மேலும் செய்திகள்
சிட்டி கிரைம் செய்திகள்
30-Mar-2025
பெ.நா.பாளையம்; சின்னதடாகம் அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.தடாகம் போலீசார் ஆனைகட்டி செக்போஸ்ட்டில் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி அப்பகுதியில் நடமாடிய நபரை பிடித்து சோதனை செய்ததில், அவரிடம், 50 கிராம் எடையுள்ள ஆறு பாக்கெட் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.விசாரணையில், அவர் மருதமலை, ஐ.ஓ.பி., காலனி, தளபதி நகர் சரவணகுமார், 23, என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
30-Mar-2025