உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரு மாத இலவச பயிற்சி வரும் 9ம் தேதி துவக்கம்

ஒரு மாத இலவச பயிற்சி வரும் 9ம் தேதி துவக்கம்

கோவை; பெரியநாயக்கன்பாளையம் புதுப்புதுாரில், கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம் செயல்படுகிறது. இங்கு, ஏப்ரல் மாதம் முதல் மார்ச் மாதம் வரை, ஆயிரம் பேருக்கு இலவச பயிற்சிகள் அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதன்படி செயல்பட்டு வருகின்றனர்.தையல், ஆரி ஒர்க், போட்டோ, வீடியோ கிராபிக் பயிற்சி ஆகிய பயிற்சிகளும், காளான் வளர்ப்பு, ஆடு, மாடு, கோழி வளர்ப்பு போன்ற விவசாயம் சார்ந்த பயிற்சிகளும், மெழுகுவர்த்தி, மசாலா பொருட்கள், ஊதுபத்தி தயாரிப்பு உட்பட பல்வேறு வகையான தொழில் பயிற்சிகள், இலவசமாக வழங்கப்படுகின்றன.தற்போது, வரும் 9ம் தேதி முதல் தொடர்ந்து 30 நாட்களுக்கு, பெண்களுக்கான தையல் பயிற்சி, இரு பாலருக்கான மொபைல் போன் பழுது நீக்கும் பயிற்சி ஆகியவை வழங்கப்படுகின்றன. 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவராக, கோவை மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இவர்களுக்கு, தேநீர், மதிய உணவு, பயிற்சி உபகரணங்கள், சீருடை ஆகியவை வழங்கப்பட உள்ளன. தொடர்புக்கு: 94890 43926.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை