உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பஸ் சக்கரத்தில் சிக்கி ஒருவர் மரணம்

பஸ் சக்கரத்தில் சிக்கி ஒருவர் மரணம்

கோவை,: காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகில், தனியார் பஸ் சக்கரத்தில் சிக்கி கேரளாவை சேர்ந்த ஒரு நபர் உயிரிழந்தார். கோவை, ராமநாதபுரத்தில் இருந்து சிவானந்தா காலனி வரை இயக்கப்படும், தனியார் பஸ் நேற்று காலை 8:00 மணிக்கு, காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டது. பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள அண்ணா சிலை அருகே பஸ் சென்ற போது, அவ்வழியாக நடந்து சென்ற வாலிபர் மீது மோதியதில், உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த காட்டூர் போலீசார் மற்றும் போக்குவரத்து புலனாய்வு போலீசார் நடத்திய விசாரணையில், பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அஜ்மல், 35 என்பது தெரியவந்தது. போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை