உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பின்னோக்கி இயக்கிய லாரி மோதி ஒருவர் பலி

பின்னோக்கி இயக்கிய லாரி மோதி ஒருவர் பலி

கோவை: அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அஸ்ரபுல் இஸ்லாம், 18. இவர் ராவத்தூரில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் தோட்டத்துக்கு தேங்காய் லோடு ஏற்ற லாரி வந்தது. அப்போது டிரைவர் லாரியை பின்னோக்கி இயக்கினார். இதில் பின்னால் நின்று கொண்டிருந்த அஸ்ரபுல் இஸ்லாம் மீது, லாரி மோதியது. படுகாயமடைந்த அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், இறந்து விட்டதாக தெரிவித்தனர். கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை