உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மேம்பால மைய தடுப்பில் பைக் மோதி ஒருவர் பலி

மேம்பால மைய தடுப்பில் பைக் மோதி ஒருவர் பலி

கிணத்துக்கடவு; பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்தவர் ஜாகிர் உசேன், 40, காய்கறி வியாபாரி. இவர், நேற்று அதிகாலை நேரத்தில், கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி நண்பர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். கிணத்துக்கடவு மேம்பாலத்தில் சென்ற போது நிலை தடுமாறி மைய தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், காயத்துடன் கீழே இருந்த ஜாகிர்உசேனை ஆம்புலன்ஸ் வாயிலாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை