மேலும் செய்திகள்
மே தின கொண்டாட்டம்; தொழிற்சங்கத்தினர் பேரணி
02-May-2025
பொள்ளாச்சி; கோவை மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில், மே தின பொதுக்கூட்டம் பொள்ளாச்சியில் நடந்தது. மாவட்ட தொழிற்சங்க செயலாளர் குருசாமி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், கந்தசாமி, நகர செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தனர்.தலைமை கழக பேச்சாளர் பாரதிபிரியன், முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்ரமணியம் ஆகியோர் பேசினர். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சின்னசாமி, கஸ்துாரி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியதாவது:தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களது நலனின் அக்கறை செலுத்தக்கூடிய ஒரே கட்சி அ.தி.மு.க., தான். தி.மு.க., தொழிலாளர்களுக்காக எதுவும் செய்யவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்து கழகத்தில் பஸ்கள் புதியதாக வாங்கியதுடன், ஏழாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. மின்வாரியத்திலும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.ஆனால், தி.மு.க., ஆட்சியில், பஸ் வரும் என அறிவிப்பு மட்டுமே வருகிறது. இந்த ஆட்சியில் வெறும் அறிக்கை மட்டுமே வருகின்றன; திட்டங்கள் செயல்பாட்டுக்கு வருவதில்லை.இந்த ஆட்சியில் விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு பிரச்னைகளால் மக்கள் நிம்மதியில்லாமல் உள்ளனர். கோவை மாவட்டத்தை தி.மு.க., புறக்கணித்து வருகிறது.இவ்வாறு, பேசினார்.
02-May-2025