உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்ரீ கணபதி மார்ட் துடியலுாரில் திறப்பு விழா

ஸ்ரீ கணபதி மார்ட் துடியலுாரில் திறப்பு விழா

பெ.நா.பாளையம்; ஒரு ஏக்கர் பரப்பளவில் ஸ்ரீ கணபதி மார்ட் என்ற பிரம்மாண்டமான, நவீன ஆடை ரகங்களை உள்ளடக்கிய ஷோரூம் திறப்பு விழா, துடியலுாரில் நடந்தது.ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், மற்றும் சுசிலா சண்முகம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர். நிறுவனர் படத்தை, கோவை ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் ரவீந்திரன் திறந்து வைத்தார். சேலைகள் பிரிவு முதல் விற்பனையை, கும்பகோணம் ராயா குரூப் நிர்வாக இயக்குனர் ராயா சீனிவாசன் துவக்கி வைத்தார். உடுமலை குணஸ்ரீ சிட்ஸ் நிர்வாக இயக்குனர் குணசேகரன் பெற்றுக் கொண்டார்.சிட்டி யூனியன் வங்கி பொது மேலாளர் ராஜம், ஆண்கள் ஆடைகள் பிரிவை திறந்து வைத்தார். முதல் விற்பனையை, செல்வம் ஏஜென்சிஸ் நிர்வாக இயக்குனர் நந்தகுமார் துவக்கி வைத்தார். ஸ்ரீ அன்னபூர்ணா குரூப் நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாசன் பெற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி