தொழிலாளர் நலவாரிய தங்கும் விடுதி திறப்பு
வால்பாறை; தொழிலாளர் நல வாரியத்தின் சார்பில் கட்டி முடிக்கப்பட்ட தங்கும் விடுதியை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார். வால்பாறை நகரில் தொழிலாளர் நலத்துறை சார்பில், 2.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொழிலாளர் தங்கும் விடுதி கடந்த மாதம் கட்டி முடிக்கப்பட்டது. பணி நிறைவடைந்த நிலையில் நேற்று, தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக, தங்கும்விடுதியை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து, வால் பாறையில் நடந்த விழாவில், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையாளர் சுபாஷ்சந்தர், நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி ஆகியோர் குத்துவிளக்கேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.