மேலும் செய்திகள்
வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரியில் ஆண்டு விழா
24-May-2025
கோவை: கண்ணம்பாளையம், ஆர்.வி.எஸ்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், 'வணக்கம் எச்.ஆர்.டி., பி கேரியர் பேர்' என்ற தலைப்பில் தொழில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. ஆர்.வி.எஸ்., கல்லுாரியின் முதல்வர் மோகன்குமார் தலைமை வகித்தார்.முகாமில், 20க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. ஐ.டி., மென்பொருள், கோர் இன்ஜினியரிங், மார்க்கெட்டிங், நிதி, உற்பத்தி மற்றும் நிர்வாக துறைகள் உட்பட பல்வேறு துறைகளில் 500க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டன.மாணவர்கள் நேரடி நேர்காணல்கள், பிளேஸ்மென்ட் சிறப்புரை மற்றும் தொழில் வழிகாட்டுதல் அமர்வுகளில் ஆர்வமாக பங்கேற்றனர். மாணவர்கள் பலர் முன்னணி நிறுவனங்களிடமிருந்து வேலைவாய்ப்பு உத்தரவுகளை இந்த முகாமில் பெற்றுக்கொண்டனர்.
24-May-2025