உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு நிலத்தில் கல்லறை அமைக்க எதிர்ப்பு

அரசு நிலத்தில் கல்லறை அமைக்க எதிர்ப்பு

மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே சிட்டேபாளையம் பெரிய தோட்டம் புதுார் பகுதியில், அரசு நிலத்தில் கிறிஸ்துவ கல்லறை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிந்து முன்னணி சார்பாக மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் வட்டாட்சியர் கவிதாவிடம் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து, ஹிந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் கூறியதாவது:- பெரிய தோட்டம் புதுார் என்ற பகுதியில் 3 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. அப்பகுதியில் கொண்டத்துக்காளியம்மன் கோவில் உள்ளது. அப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர், இடத்தை ஆய்வு செய்ய வந்துள்ளார். மக்கள் எதற்காக என அதிகாரிகளிடம் கேட்ட போது, கிறிஸ்தவ கல்லறை தோட்டம் இங்க வருது என கூறியுள்ளார். ஹிந்து முன்னணி சார்பாக வரும் 7ம் தேதி கவுண்டம்பாளையத்தில் உள்ள ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி