மேலும் செய்திகள்
கொடுமையை எதிர்த்து நில்... துாற்றுதல் ஒழி
10-Dec-2024
நெகமம்:நெகமம், மெட்டுவாவி தனியார் திருமண மண்டபத்தில், 'சிப்காட்' தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.நெகமம், மெட்டுவாவி ஊராட்சியில், 1,310 ஏக்கரில், 'சிப்காட்' தொழில் பூங்கா அமைக்க 'சர்வே' பணிகள் நடந்தது. இதை எதிர்த்து, மெட்டுவாவி மற்றும் அதை சுற்றியுள்ள கிராம விவசாயிகள் பலர், மெட்டுவாவியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தினர்.இதில், பா.ஜ., கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், நேதாஜி மக்கள் இயக்கத்தினர், விவசாயிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசியதாவது:ஈரோடு பெருந்துறை 'சிப்காட்' துவக்கப்பட்ட போது, ஏராளமான தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்தது. ஆனால், தற்போது அதைச்சுற்றியுள்ள 10 முதல் 20 கி.மீ., வரை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.மேலும், அப்பகுதி மக்களுக்கு நோய்த்தாக்குதல் ஏற்பட்டு மக்கள் பலர் பாதிப்படைந்தனர். இதேபோன்று ஒரு நிலைமை, தற்போது மெட்டுவாவி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு வந்துள்ளது.இங்கு, உரிய அனுமதி இன்றி இரவு நேரத்தில் 'சர்வே' செய்யப்பட்டுள்ளது. 'சிப்காட்' தொழிற்சாலை மெட்டுவாவி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் அமைவதை அனுமதிக்கக்கூடாது.இத்தொழிற்சாலை இங்கு அமைந்தால், மெட்டுவாவி பகுதி மட்டுமின்றி சுற்று வட்டாரத்தில் தண்ணீர் மற்றும் காற்று மாசுபடும். விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும்.எனவே, மக்கள் அனைவரும் கட்சி பாகுபாடு இன்றி, இங்கு வரும் தொழிற்சாலையை தடுக்க வேண்டும். தொழிற்சாலை அமைக்க தமிழகத்தில், பல்வேறு பகுதியில் இடம் உள்ளது. ஆனால், விவசாயம் சார்ந்த இப்பகுதியில் தொழிற்சாலை அமைப்பதை அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு, பேசினார்.
10-Dec-2024