உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மொபைல் போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு; ஸ்ரீபதி நகரில் தெற்கு கோட்டாட்சியர் விசாரணை

மொபைல் போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு; ஸ்ரீபதி நகரில் தெற்கு கோட்டாட்சியர் விசாரணை

கோவை; கோவை ராமநாதபுரம் அருகே ஸ்ரீபதி நகரில், குடியிருப்பு பகுதியில் மொபைல் போன் கோபுரம் அமைக்க, அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, தெற்கு கோட்டாட்சியர் ராம்குமார், நேற்று ஆய்வு செய்தார்.கோவை, ராமநாதபுரம் ஸ்ரீபதி நகர் விரிவாக்கம் மூன்றாவது வீதியில், குடியிருப்பு பகுதியில், மொபைல் போன் கோபுரம் அமைக்க, அப்பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜூன் முதல் பல்வேறு கட்டமாக போராடி வருகின்றனர். முதலில், 'முதல்வரின் முகவரி' துறைக்கு புகார் மனு அனுப்பினர்.இச்சூழலில், மொபைல் போன் கோபுரம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருப்பதால், கோபம் அடைந்த அப்பகுதி மக்கள், 'முதல்வரின் முகவரி' துறைக்கு மீண்டும் மனு அனுப்பியிருக்கின்றனர்.கடந்த திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில், பொதுமக்கள் சார்பாக மனு கொடுத்தனர். கள ஆய்வு செய்ய, தெற்கு கோட்டாட்சியருக்கு கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தினார்.அதன்படி, தெற்கு கோட்டாட்சியர் ராம்குமார், தாசில்தார் கிருஷ்ணவேணி, வி.ஏ.ஓ., ராஜேஷ்குமார் உள்ளிட்டோர், ஸ்ரீபதி நகரில் ஆய்வு செய்தனர். ஸ்ரீபதி நகர் மக்கள் நல்வாழ்வு சங்க தலைவர் மனோகரன் தலைமையில் திரண்ட மக்கள், மொபைல் போன் டவர் அமைக்க, எதிர்ப்பு தெரிவித்தனர்.இதுதொடர்பாக, கோட்டாட்சியர் ராம்குமாரிடம் கேட்டபோது, ''மொபைல் போன் கோபுரம் அமைக்க, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம், கோபுரத்தின் உயரம் மற்றும் அதன் எடை உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியான தகவல் கோரியிருக்கிறோம். மக்கள் ஆட்சேபனை இருந்தால், அனுமதி கொடுக்க இயலாது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ