உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விமான நிலையம் அருகே மது பார் திறக்க எதிர்ப்பு

விமான நிலையம் அருகே மது பார் திறக்க எதிர்ப்பு

கோவை : விமான நிலையம் அருகே துவக்கப்படவுள்ள, மதுபாருக்கு அனுமதியளிக்கக்கூடாது என கோரி, கோவை சின்னியம்பாளையம் குளத்துார் ரோடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மனு அளித்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது: கோவை, அவிநாசி ரோடு, நீலாம்பூர் தட்டான் தோட்டம்- என்ற இடத்தில் தனியார் கல்லுாரிகள், கல்லுாரி மாணவிகள் விடுதிகள், ஓட்டல்கள் மற்றும் கோவை விமான நிலையம் அமைந்துள்ளது. இதன் அருகில் தனியார் பார் திறப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பார் அமைய உள்ள இடத்திற்கு மிக அருகில், கோவையிலிருந்து அவிநாசி, சேலம், சென்னை மற்றும் பெங்களூரு செல்வதற்கான நெடுஞ்சாலை உள்ளதால் வாகன போக்குவரத்து எப்போதும் அதிகமாக இருக்கும். கல்லுாரிக்கு செல்லும் மாணவர், மாணவிகள் உட்பட பொதுமக்களின் நடமாட்டமும் எப்போதும் அதிகமாக இருக்ககூடிய பகுதியாகும்.எனவே இந்த பகுதியில், தனியார் பார் அமைந்தால் மது அருந்திவிட்டு வருபவர்களால் பொதுமக்கள், பெண்களுக்கு தொந்தரவு ஏற்படும். வாகன ஓட்டிகளுக்கும் இடையூறுகள் ஏற்படுத்தி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பார் திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை