சரியான முகவரியில் பாஸ்போர்ட் டெலிவரி செய்ய உத்தரவு
கோவை; பாஸ்போர்ட்களை சம்பந்தப்பட்ட முகவரியில் சம்பந்தப்பட்ட நபரிடம் வழங்க வேண்டும். வேறு முகவரியிலோ வேறு நபரிடமோ வழங்கக்கூடாது என்று வெளியுறவுத்துறைஉத்தரவு பிறப்பித்துள்ளது.இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அனைத்து மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கும், தலைமை தபால்துறை அலுவலகங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:நம்நாட்டில் வசிப்போர் வெளிநாடு செல்ல பயன்படுத்துவதற்காக, வெளியுறவுத்துறையிலிருந்துபெறும் பாஸ்போர்ட் ஐ கட்டாயம் சம்பந்தப்பட்ட முகவரியில் உரியவரிடம் கொடுத்து கையெப்பம் பெற வேண்டும். மாற்று முகவரியிலோ, மாற்று நபரிடமோ சமர்பிக்கக்கூடாது. சம்பந்தப்பட்ட முகவரியல்லாமலோ, அலுவலகத்தில் வைத்தோ வேறு இடத்தில் வைத்தோ பட்டுவாடா செய்யக் கூடாது. முகவரியில் உள்ள இடத்தில் வைத்து பட்டுவாடா செய்வதன் வாயிலாக விசாரணையினை நிறைவு செய்து வழங்குவதாக பொருள் கொள்ளப்படுகிறது.பாஸ்போர்ட்டின் போலி தன்மை குறித்து தொடர்ந்து புகார்கள் வருவதால் இந்திய தபால் துறைக்கும் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கும் இந்த சுற்றறிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதை கட்டாயம் பின்பற்ற தபால்துறையும், மண்டல பாஸ்போர்ட் அலுவலகமும் அறிவுறுத்தியுள்ளது.