உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீடு சுத்தப்படுத்தும் இயந்திரம் பழுதால் இழப்பீடு தர உத்தரவு

வீடு சுத்தப்படுத்தும் இயந்திரம் பழுதால் இழப்பீடு தர உத்தரவு

கோவை; வீடு சுத்தப்படுத்தும் இயந்திரம் பழுதானதால், இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.கோவை, பீளமேடு, கொடிசியா ரோட்டிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். திருச்சி ரோட்டிலுள்ள 'யுரேகா போர்ப்ஸ்' நிறுவன கிளையில் 32 ஆயிரம் ரூபாய்க்கு, வீட்டை சுத்தப்படுத்தும் மெஷின் வாங்கினார். ஒரு ஆண்டுக்கான 'வாரன்டி' கார்டு வழங்கினர்.வீட்டை சுத்தம் செய்யும்போது இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதனால், அந்நிறுவன கிளையை தொடர்பு கொண்டு, பழுதான இயந்திரத்தை மாற்றி தருமாறு கோரினார். அதற்கு முறையான பதில் அளிக்கவில்லை. பணத்தை திரும்ப தருமாறு இ-மெயில் அனுப்பியும் பதில் இல்லை. இதனால் வேறு சர்வீஸ் சென்டரில் கொடுத்து பழுது நீக்கினார்.இதனால், இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'விற்பனை செய்த பொருள் பழுதான பிறகு, 'வாரன்டி' காலம் இருந்தும் சர்வீஸ் செய்து கொடுக்காமல் சேவைகுறைபாடு செய்துள்ளதால், மனுதாரருக்கு இழப்பீடாக, 10 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !