உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி கைது

ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி கைது

அன்னுார்:சிறுவனை சரமாரியாக தாக்கிய ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம், அன்னுார் கோவில்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், 58. இவரது மனைவி நிர்மலா. இவர்கள் இருவரும் கோட்டைப்பாளையத்தில், 'கிரேஸ் ஹேப்பி ஹோம்' என்னும் ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வருகின்றனர். கடந்த 12 ஆண்டு களாக செயல்பட்டு வரும் இந்த இல்லத்தில், ஒன்பது சிறுவர்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில், இரு சிறுவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இல்ல நிர்வாகி செல்வராஜ், 8 வயது சிறுவனை சரமாரியாக தாக்கினார். குழந்தைகள் நல பாதுகாவலர் பரிமளா, கோவில்பாளையம் இன்ஸ் பெக்டர் இளங்கோ, எஸ்.எஸ்.குளம் வருவாய் ஆய்வாளர் சுகன்யா ஆகியோர், அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் ஆய்வு செய்தனர். சம்பந்தப்பட்ட சிறுவர்களிடம் விசாரித்தனர். இதில் சிறுவனை தாக்கியது உறுதி செய்யப் பட்டது. இதையடுத்து ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி செல்வராஜ் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ