உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓ.ஆர்.எஸ்., கரைசல் இரு வகையாக தயாரிப்பு; பயன்பாட்டை கேட்டறிய அறிவுறுத்தல்

ஓ.ஆர்.எஸ்., கரைசல் இரு வகையாக தயாரிப்பு; பயன்பாட்டை கேட்டறிய அறிவுறுத்தல்

பொள்ளாச்சி; ஓ.ஆர்.எஸ்., கரைசல் இரு வகையாக தயாரிக்கப்படுவதால், அதன் பயன்பாட்டை வாடிக்கையாளர்களிடம் கேட்டறிந்து விற்பனை செய்ய, மருந்து கடைக்காரர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் உள்ள மருந்துக்கடைகளில், 'ஓரல் ரீ- ஹைட்ரேஷன் சொல்யூஷன்' எனப்படும் ஓ.ஆர்.எஸ்., கரைசலானது, ஜூஸ், பவுடர் என, இரு நிலைகளில் விற்கப்படுகிறது. வாந்தி, வயிற்றுப்போக்கு, நீர்ச்சத்து குறைபாடு போன்றவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு, இவை பயன்படுத்தப்படுகிறது.ஆனால், ஓ.ஆர்.எஸ்., கரைசல், மருத்துவம் மற்றும் உணவு சார்ந்து, இரு வகைகளாக, தயாரித்து விற்கப்படுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு கிடையாது. அவ்வகையில், தற்போது, மருந்துக் கட்டுப்பாடு மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் ஒன்றிணைந்து, வாடிக்கையாளர் பயன்பாட்டை கேட்டறிந்து, ஓ.ஆர்.எஸ்., கரைசலை விற்க, மருந்துக் கடைக்காரர்களிடம் அறிவுறுத்தி வருகின்றனர்.மருந்தக ஆய்வாளர்கள் கூறியதாவது:ஓ.ஆர்.எஸ்., கரைசல் இரு வகைகளாக விற்கப்படுகிறது. அதில், ஓ.ஆர்.எஸ்., ஐ.பி., (இந்தியன் பார்மகோபியா) மற்றும் டபிள்யூ.எச்.ஓ., என குறிப்பிட்டுள்ள கரைசல் மட்டுமே வாந்தி, வயிற்றுப்போக்கு, நீர்ச்சத்து குறைபாட்டிற்கு ஏற்றதாகும்.டபிள்யூ.எச்.ஓ., மற்றும் ஐ.பி., இல்லாமல் விற்கப்படும் ஓ.ஆர்.எஸ்., கரைசல், உணவு சார்ந்தது. அவற்றை உட்கொள்வதால், நோய் பாதிப்பை தவிர்க்க, எந்த முன்னேற்றமும் தராது.எனவே, மருந்துக்கடைகளில், ஓ.ஆர்.எஸ்., கரைசல் கோரும் வாடிக்கையாளர்களிடம், பயன்பாட்டிற்கான காரணத்தை கேட்டறிந்து, அதற்கேற்ப அந்த வகையை விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, மாவட்டந்தோறும் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுகிறது.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ