ஐந்தாவது டிவிஷன் கிரிக்கெட்: மழையால் ஓவர்கள் குறைப்பு
கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் ஐந்தாவது டிவிஷன் போட்டி, பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., உள்ளிட்ட மைதானங்களில் நடந்துவருகிறது. சன் ஸ்டார் அணியும், கே.எப்.சி.சி., அணியும் மோதின. மழை காரணமாக, 40 ஓவர்களாக குறைக்கப்பட்டன. முதலில் பேட்டிங் செய்த சன் ஸடார் அணியினர், 40 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு, 171 ரன்கள் எடுத்தனர். அணி வீரர் பிரவீன்குமார், 38 ரன்கள் எடுத்தார். எதிரணி வீரர் அருண்குமார் மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார். அடுத்து விளையாடிய கே.எப்.சி.சி., அணியினர், 27.3 ஓவரில் ஏழு விக்கெட் இழப்புக்கு, 110 ரன்கள் எடுத்தனர். எதிரணி வீரர் அரவிந்த் குமார், மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார். மழை காரணமாக, 'ரன் ரேட்' அடிப்படையில் சன் ஸ்டார் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, போட்டிகள் நடந்துவருகின்றன.