உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேக்கேஜிங் தொழில்நுட்ப கருத்தரங்கு; புதிய தொழில் முனைவோர் பங்கேற்பு

பேக்கேஜிங் தொழில்நுட்ப கருத்தரங்கு; புதிய தொழில் முனைவோர் பங்கேற்பு

கோவை; கோவை மாவட்ட தொழில் மையம் சார்பில், சுற்றுச்சூழலுக்கு உகந்த பேக்கேஜிங் மற்றும் சமீபத்தில் போக்குகள்' குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம், கொடிசியா வணிக வளாகத்தில் நேற்று நடந்தது.மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சண்முகசிவா வரவேற்றார். இந்திய பொதிவாக்க தொழில்நுட்பக் கழக துணை இயக்குனர் பொன்குமார், பேக்கேஜிங் பொருட்கள் மற்றும் அதன் செயல்பாடுகள், பேக்கேஜிங் முறையில் சமீபத்திய போக்குகள் குறித்து பேசினார்.குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களான, மட்கும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான பேக்கேஜிங் பொருட்கள் குறித்து, நிறுவனத்தை சேர்ந்த பிரேம்ராஜ் விளக்கினார்.முக்கியமாக, அதிகம் பயன்படுத்தப்படும் உணவு பொருட்கள் பேக்கேஜிங் குறித்து, அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்வி கழக இணை பேராசிரியர் ராஜேஸ்வரி பேசினார். பங்கேற்பாளர்களின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டது.கருத்தரங்கில், ஜவுளி, கைவினைப் பொருட்கள், தோல் பொருட்கள் மற்றும் இதர ஏற்றுமதி நிறுவன உரிமையாளர்கள், புதிய தொழில்முனைவோர் உட்பட 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !