உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விஷ்வ ஹிந்துபரிஷத் ஆர்ப்பாட்டம் 

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விஷ்வ ஹிந்துபரிஷத் ஆர்ப்பாட்டம் 

கோவை: காஷ்மீர்பஹல்காம் தாக்குதலை கண்டித்து, நேற்று கோவையில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.செஞ்சிலுவை சங்கம் அருகே நடந்த, ஆர்ப்பாட்டத்தில் விஷ்வஹிந்து பரிஷத் மாநில பொறுப்பாளர் சிவலிங்கம், மாவட்ட தலைவர் சிவராஜ், மாவட்ட செயலாளர் ரவீந்தரன், பா.ஜ., மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் வசந்தராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.விஷ்வ ஹிந்து பரிஷத் தென் தமிழகத்தின் மாநில செயலாளர் லட்சுமிநாராயணன் கூறியதாவது:-காஷ்மீரிலுள்ள பஹல்காம் சுற்றுலா மையத்தில், சுற்றுலா பயணிகளிடம் பெயர், மதம் கேட்டு, ஹிந்துக்கள் என தெரிந்தே ஆண்களை மட்டும், சுட்டு படுகொலை செய்தனர். பாகிஸ்தானியர், காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளை பயன்படுத்தி, இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். விஷ்வ ஹிந்து பரிஷத் இதை வன்மையாக கண்டிக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ