உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பெயின்டர் கொலை வழக்கு தொழிலாளிக்கு ஆயுள் சிறை

 பெயின்டர் கொலை வழக்கு தொழிலாளிக்கு ஆயுள் சிறை

கோவை: கோவையில் பெயின்டர் கொலை வழக்கில், தொழிலாளிக்கு ஆயுள்சிறை விதிக்கப்பட்டது. தென்காசி மாவட்டம், சிவராம பேட்டையை சேர்ந்தவர் மாரித்துரை,50. திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். பெயின்டரான இவர், வேலை தேடி கோவைக்கு வந்தார். பெ.நா.பாளையம், வீரபாண்டி பிரிவு பகுதியில் தங்கி வேலைக்கு சென்றபோது, ஜோதிபுரம், திருமலைநாயக்கன் பாளையத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி சக்திவேல்,30, என்பவருடன் நட்பு ஏற்பட்டது. 2023 ஆக. 12ல், அங்குள்ள பாரில் மது குடித்த போது, மாரித்துரையிடம், மது வாங்கித்தருமாறு சக்திவேல் கேட்டுள்ளார். அவர் மறுத்ததால் தகராறு ஏற்பட்டது. சக்திவேல் ஆத்திரமடைந்து மாரித்துரையை கல்லால் தாக்கி கொலை செய்தார். பெ.நா.பாளையம் போலீசார் விசாரித்து, சக்திவேலுவை கைது செய்தனர். அவர் மீதான வழக்கு, கோவை ஐந்தாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி சிவகுமார், குற்றம் சாட்டப்பட்ட சக்திவேலுக்கு ஆயுள்சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் மோகன்பிரபு ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை