பாலக்காடு ரயில் இயக்கம் மாற்றம்
கோவை: ஈரோடு அருகே ரயில்வே பணிமனையில் இன்ஜினியரிங் பணிகள் நடக்கின்றன. இதனால், கோவை வழியாக இயக்கப்படும் திருச்சி-பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில்(16843) இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சியில் இருந்து மதியம் 1:00க்கு புறப்படும் ரயில் 13, 15ம் தேதிகளில் ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தப்படும். பணிகள் முடிந்த பின்னர் முன்பதிவில்லா சிறப்பு ரயிலாக பாலக்காடு டவுன் வரை இயக்கப்படும் என, சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.