உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தாமதமாகும் ஊராட்சி பில்; தவிக்கும் நிர்வாகம்

தாமதமாகும் ஊராட்சி பில்; தவிக்கும் நிர்வாகம்

அன்னுார்; ஊராட்சிகளில் செய்யப்பட்ட பணிகளுக்கான பில்லுக்கு ஒப்புதல் கிடைக்காததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 5ம் தேதியுடன் ஊராட்சி தலைவர்களின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதையடுத்து ஊராட்சிகளில் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.நான்கு அல்லது ஐந்து ஊராட்சிகளுக்கு ஒரு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஊராட்சிகளில் குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்தல், கழிவுநீர் அகற்றுதல், தெருவிளக்கு மாற்றுதல் உள்ளிட்ட சில பணிகளை செய்த ஊராட்சி நிர்வாகங்கள், அதற்கான பில் தொகையை ஒப்புதலுக்கு ஒன்றிய நிர்வாகத்திற்கு அனுப்பி உள்ளன. எனினும் ஒன்றிய நிர்வாகம் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.ஊராட்சி நிர்வாகிகள் கூறுகையில், 'ஊராட்சி தலைவர்கள் பதவியில் இருக்கும் போது பணிகளை செய்து விட்டு பின்னர் தாமதமாக அந்தத் தொகையை ஊராட்சி கணக்கிலிருந்து விடுவித்தனர். ஆனால் தற்போது ஒன்றிய நிர்வாகம் ஒப்புதல் அளித்தால் மட்டுமே வங்கி கணக்கில் இருந்து செய்யப்பட்ட பணிகளுக்கு தொகை வழங்க முடியும். தற்போது ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் ஒப்புதல் வழங்க தாமதம் செய்வதால் பல்வேறு பணிகளை தொடர்ந்து செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி