ஊராட்சி துறை ஓய்வூதியர்கள்ஆர்ப்பாட்டம்
கோவை: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்தினர். ஓய்வு பெற்றோர் தணிக்கை தடை குறித்த நிலையை அறிய இணைய தளம் உருவாக்குதல், மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்குதல் உள்ளிட்ட, 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் மாணிக்கம் உரை நிகழ்த்தினார்.