உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் சிக்கினார்; வீட்டுமனை வரன்முறைபடுத்த பேரம்

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் சிக்கினார்; வீட்டுமனை வரன்முறைபடுத்த பேரம்

அன்னுார்; மனை வரன்முறைப்படுத்த பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் கையும் களவுமாக சிக்கினார். கோவை மாவட்டம்,கோவில்பாளையத்தை அடுத்த கோட்டைபாளையத்தைச் சேர்ந்தவர் விக்ரம் ராஜா, 42. இவர் மனைவிக்கு சொந்தமான நான்கு சென்ட் இடம், எஸ். எஸ்.குளம் ஒன்றியத்தில், கொண்டையம்பாளையம் ஊராட்சியில் உள்ளது. இந்த வீட்டுமனையை வரன்முறை படுத்துவதற்காக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்துள்ளார். எஸ்.எஸ்.குளம் ஒன்றிய அலுவலகத்திற்கு சென்ற ஆவணங்கள் உத்தரவுக்குப் பிறகு மீண்டும் கொண்டையம்பாளையம் ஊராட்சிக்கு வந்துள்ளன. எனினும் இதற்கான உத்தரவை தராமல் ஊராட்சி செயலர் முத்துச்சாமி, 48, இழுத்தடித்துள்ளார். இதையடுத்து விக்ரம் ராஜா பேசிய போது 12 ஆயிரம் ரூபாய் தந்தால் உத்தரவு தருவதாக முத்துச்சாமி கூறியுள்ளார். பின்னர் பேரம் பேசி பத்தாயிரம் ரூபாய் தருவதாக முடிவானது. இது குறித்து விக்ரம் ராஜா, கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய நோட்டுக்களை விக்ரம் ராஜாவிடம் கொடுத்தனர். நேற்று மதியம் 2:00 மணிக்கு விக்ரம் ராஜா கொண்டையம்பாளையம் ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று ஊராட்சி செயலர் முத்துச்சாமியிடம் ரசாயனம் கலந்த பத்தாயிரம் ரூபாயை கொடுத்தார். முத்துச்சாமி அதை வாங்கியவுடன் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், எழிலரசி மற்றும் போலீசார் முத்துசாமியை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் நள்ளிரவு வரை அவரிடம் வாக்குமூலம் பெற்றனர். இன்று அவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார், என போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Vijay Mathu
செப் 16, 2025 08:08

இது போன்ற ஊழல்கள் நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு குடிநீர் வருகாலத்தில் பல கொடி மசூதி நடக்கிறது ஜல்ஜீவன் பைப் பாயிண்ட் மூலமா இங்கு முள் அதிகாரிகள் கொண்டிருக்கிறார்கள் இது உடனே கண்டிக்க வேண்டும்


Muthukumaran
செப் 15, 2025 10:44

அரசு அலுவலர்களுக்கு டயாலிசிஸ் செய்து அறம் சார்ந்த ரத்தம் மாற்றப்பட்டு விட்டது. அதை ஒன்றும் செய்யமுடியாது நீதி மன்றங்ள் இவர்களது வழக்கில் தீர்ப்புக்கொடுத்தும் பயனேதுமில்லை. அரசியல்வாதிகளை மிஞ்சிய நிலையில் தண்டனையிலிருந்து தள்ளப்போட கற்றுக்கொண்டுள்ளனர் ஆளும் கட்சியின் வழக்குகள் இவர்களை உத்வேகப்படுத்தி விட்டன.


NIyayanidhi
செப் 15, 2025 10:26

இது போன்ற நிகழ்வுகள் தொடர வேண்டும். வர, வர அரசு அலுவலர்களுக்கு கொஞ்சம் கூட சூடு, சொரணையே இல்லாமல் போய்விட்டது.


Govindaraju P
செப் 14, 2025 06:04

குட் டெசிஷன் sir


சமீபத்திய செய்தி