உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெற்றோர் இறந்ததாக ஆவணம் தயாரித்து நிலம் விற்ற பாசக்கார மகள் கைது

பெற்றோர் இறந்ததாக ஆவணம் தயாரித்து நிலம் விற்ற பாசக்கார மகள் கைது

கோவை; பெற்றோர் உயிரிழந்ததாக ஆவணம் தயாரித்து நிலம் விற்பனை செய்த மகள், மருமகனை போலீசார் கைது செய்தனர்.கோவை இருகூரை சேர்ந்தவர் பூபதி, 76. இவருக்கு, 2 மகள்கள் உள்ளனர். 2வது மகள் மாலதி. இவரது கணவர் பிரவீன் குமார். இவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், ஆதம்பாக்கம் பிருந்தாவன் நகரில் வசித்து வருகின்றனர். பூபதிக்கு இருகூரில், 32.71 சென்ட் நிலம் உள்ளது.அந்த நிலத்தை பூபதிக்கு தெரியாமல் மாலதி, தனது கணவருடன் சேர்ந்து மோகன்ராஜ் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். இந்த தகவல் பூபதிக்கு தெரியவந்ததும் அவர் சிங்காநல்லுார் சார் பதிவாளர் அலுவலகம் சென்று விசாரித்தார்.அதில் பூபதி மற்றும் அவரது மனைவி உயிரிழந்து விட்டதாக போலி சான்றிதழ் தயாரித்து நிலத்தை விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து பூபதி, மாலதியிடம் கேட்டுள்ளார். அப்போது மாலதியும், அவரது கணவரும், பூபதியை மிரட்டி உள்ளனர்.இதையடுத்து பூபதி, கோவை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து மாலதி, 39, மற்றும் அவரது கணவர் பிரவீன்குமார், 41 ஆகிய இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை