உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.15 கோடியில் பாராலிம்பிக் ஸ்டேடியம்

ரூ.15 கோடியில் பாராலிம்பிக் ஸ்டேடியம்

கோவை: கோவை மாநகராட்சி சார்பில் ரூ.15 கோடியில் கவுண்டம்பாளையம் பழைய குப்பை கிடங்கு வளாகத்தில், 'பாராலிம்பிக் ஸ்டேடியம்' அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு நிர்வாக அனுமதி கேட்டு, தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டிருக்கிறது. கவுண்டம்பாளையம் ஜீவா நகர் மெயின் ரோட்டில், பழைய குப்பை கிடங்கு வளாகத்தில், 15 கோடி ரூபாயில் 'பாராலிம்பிக் ஸ்டேடியம்' அமைக்க மாநகராட்சி திட்ட அறிக்கை தயாரித்து, நிர்வாக அனுமதி கேட்டு, தமிழ்நாடு நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரகத்துக்கு அனுப்பியுள்ளது. தரைத்தளம், முதல் தளம், மொட்டை மாடி என மூன்று தளங்களாக பிரித்து, 43,580 சதுரடியில் ஸ்டேடியம் அமைய உள்ளது. என்னென்ன வசதிகள்? வரவேற்பறை, மேலாளர் மற்றும் கருத்தரங்கு அறைகள், லாக்கர் வசதி மற்றும் தேநீர் அருந்துவதற்கான கபே ஏற்படுத்தப்படும். பேட்மின்டன், டென்னிஸ் விளையாடுவதற்கான மைதானம் உருவாக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவரும் பயன்படுத்தும் வகையில், கழிப்பறை வசதியும் இருக்கும். ஜிம், உட்கார்ந்தபடி வாலிபால் விளையாடுவதற்கான மைதானம், யோகாசனம் செய்வதற்கு பிரத்யேக அறை, மருத்துவ அ றை, மாடிக்கு செல்ல படிக்கட்டு, ரேம்ப் மற்றும் லிப்ட் வசதி ஏற்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டு உள்ளதாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை