உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்தாச்சு துணை ராணுவ படை

 தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்தாச்சு துணை ராணுவ படை

கோவை: தேர்தல் பணிக்காக துணை ராணுவ படையினர், 144 பேர் நேற்று கோவை வந்தனர். கோவை மாவட்டத்தில் உள்ள, 3,821 ஓட்டு சாவடிகளில், 153 பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. தேர்தல் அன்று மிக பதற்றமான, பதற்றமான ஓட்டு சாவடிகளில் துணை ராணுவத்தினர், போலீசார், பிற ஓட்டு சாவடிகளில் போலீசார், ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். தேர்தல் குறித்த கண்காணிப்பு பணிகளை ஒருங்கிணைக்க, புகார்களை பெற கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 10 பேர் கொண்ட குழு பணியில் ஈடுபட உள்ளது. மாநகர போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாநகர அளவில், 1,775, ஓட்டு சாவடிகள், 333 இடங்களில் அமைந்துள்ளன. ஒரே பகுதியில், ஆறு மையங்களுக்கு மேல் என்ற பிரிவில், 78 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. 46 பதற்றமானவை பட்டியலில் உள்ளன. கட்டுப்பாட்டு மையத்தில், ஒரு உதவி கமிஷனர், இரு எஸ்.ஐ., உட்பட 10 பேர் பணிபுரிவர். மையத்துக்கான புகார் பதிவு எண் விரைவில் அறிவிக்கப்படும். பாதுகாப்புக்காக துணை ராணுவ படையினர் கோவை வந்துள்ளனர். பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் பணியமர்த்தப்படுவர்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி