உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சேறும், சகதியுமான பள்ளி வளாகம் சீரமைக்க பெற்றோர் கோரிக்கை

சேறும், சகதியுமான பள்ளி வளாகம் சீரமைக்க பெற்றோர் கோரிக்கை

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகராட்சி தொடக்கப்பள்ளியில், மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறியுள்ளதால், மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.பொள்ளாச்சி, கோட்டூர் வழி தெப்பக்குளம் நகராட்சி துவக்கப்பள்ளி, ஆங்கிலேயர் காலத்தில், 1921ம் ஆண்டு துவங்கப்பட்டது. அதன்பின், நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, எட்டாம் வகுப்பு வரை செயல்படுகிறது.இப்பள்ளிக்கு, கழிப்பிடம் அருகே குறுகலான பாதையும், தெப்பக்குளம் எதிரே முகப்பு பகுதியும் உள்ளது. தற்போது முகப்பு பகுதியில் தற்காலிக மார்க்கெட் செயல்படுகிறது.தற்போது பெய்யும் மழையால், பள்ளி வளாகத்தில் குளம் போல மழைநீர் தேங்கியது. மாணவர்கள் பள்ளிக்கு செல்ல சிரமப்பட்டனர். மேலும், அங்கு கடை வைத்துள்ள வியாபாரிகளும் காய்கறிகளை விற்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.தற்போது, நகராட்சி வாயிலாக மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுத்தாலும், சேறும், சகதியுமாக மாறியுள்ள பள்ளி வளாகத்தை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.பெற்றோர் கூறுகையில், 'பள்ளிக்கு செல்லும் பாதை சேறும், சகதியுமாக மாறி மாணவர்கள் நடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது. நடந்து செல்லும் போது கீழே விழக்கூடிய அபாயமும் உள்ளதால், அதிகாரிகள் கவனம் செலுத்தி பாதையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தற்காலிக கடை வியாபாரிகளுக்கு போதிய வசதிகளை மேம்படுத்த வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை