தைப்பூச விழா வருபவர்களுக்கு பார்க்கிங் வசதி
கோவை; மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு, இன்று தேர் திருவிழா நடக்கிறது. இங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க வாகனங்களுக்கான பிரத்யேக பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, நான்கு சக்கர வாகனங்களுக்கு, தைலக்காடு, இந்திரா நகர், வள்ளியம்மாள் கோவில், சட்டக்கல்லுாரி ஆகிய நான்கு இடங்களில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களுக்கு, பஸ் ஸ்டாண்ட் பின்புறம் அல்லது பொதிகை பார்க்கிங்கில் நிறுத்தலாம். வாகனங்களை இப்பார்க்கிங்களில் நிறுத்தி விட்டு, தேவஸ்தான பஸ்கள் அல்லது படிக்கட்டு வழியாக செல்லலாம் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.