உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாலை திருப்பங்களில் வாகனங்கள் நிறுத்தம்

சாலை திருப்பங்களில் வாகனங்கள் நிறுத்தம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரில், சாலை திருப்பங்களில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களால், போக்குவரத்து பாதிக்கிறது. பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்களில், வாகனங்கள் நிறுத்தம் செய்ய போதிய 'பார்க்கிங்' வசதிகள் இல்லை. வாகன ஓட்டுநர்கள், வாகனங்களை ரோட்டிலேயே தாறுமாறாக நிறுத்திச் செல்லும் நிலை உள்ளது. அதிலும், 'நோ - பார்க்கிங்' என தெரிந்தும், வாகனங்கள் நிறுத்தம் செய்வதால் நெரிசல் அதிகரிக்கிறது. இதுஒருபுறமிருக்க, சாலை சந்திப்புகளில், வாகனங்கள் திருப்ப முடியாத அளவிற்கு கார் மற்றும் டூ வீலர் நிறுத்தப்படுகிறது. குறிப்பாக, நியூஸ்கீம் ரோடு, போலீஸ் ஸ்டேஷன் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், சாலை சந்திப்புகள், திருப்பங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால், பாதிப்பு ஏற்படுகிறது. சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: நகரில், வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தவிர, ஓட்டல்கள், வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களை நிறுத்தம் செய்ய போதிய வசதிகள் இல்லாததால், ரோட்டோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். சாலை சந்திப்புகளில் வாகனங்கள் நிறுத்துவதை கண்டறிந்து தடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை