உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பசும்பொன் தேவர் கல்வி அறக்கட்டளை அலுவலகம் திறப்பு

பசும்பொன் தேவர் கல்வி அறக்கட்டளை அலுவலகம் திறப்பு

கோவை;ராமநாதபுரம், 80 அடி ரோடு அருகில் உள்ள பெருமாள் கோவில் எதிர்புறம், கோவை மாவட்ட தேவர் பேரவை, பசும்பொன் தேவர் கல்வி அறக்கட்டளையின் தலைமை அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது.கோவை மாவட்ட தேவர் பேரவையின் தலைவர் சுந்தர தேவர் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து, பேரவையின் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசினார்.விழாவில், பூலித்தேவன், வேலுநாச்சியார், மருதுபாண்டியர்கள், பாண்டித்துரை தேவர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சின்னப்பா தேவர், முத்துசாமி தேவர், பசும்பொன் தேவர், நடராஜ தேவர், மறைந்த நடிகர் விவேக் படங்கள் திறந்து வைக்கப்பட்டது.சாதனை மகளிருக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது. பேரவையின் வளர்ச்சிக்காக உழைத்தவர்களுக்குப் பாராட்டும், வாழ்த்துரையும் வழங்கப்பட்டது. சேரன் குரூப்ஸ் நிறுவனர் ஜெயராமன், கோவை அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ., டாக்டர் சரவணப்பிரியா, தேவர் பேரவையின் நிர்வாகிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஏராளமானோர் விழாவில் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை