உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிராம சாலையில் பேட்ச் பணி; ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை

கிராம சாலையில் பேட்ச் பணி; ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, வஞ்சியாபுரம் முதல் மாக்கினாம்பட்டி வரையிலான கிராம சாலைகளில் 'பேட்ச்' பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கிராம மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்த கிராம சாலைகள், நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்படுகிறது. குறிப்பாக, பிரதான தொழிற்சாலைகள், வேளாண் சந்தைகள், சுற்றுலா தலங்கள், மதவழிபாட்டுத் தலங்கள், வட்டார தலைமையகம் அமைந்த சாலைகளை நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்க வேண்டும். தவிர, கிராமங்களை நகரப் பகுதியோடு இணைக்கும் சாலைகளை நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட்டும் வருகின்றன. பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி - வால்பாறை சாலை முதல் பாலமநல்லுார் வழி பக்கோதிபாளையம் சாலை (4.46 கி.மீ., நீளம்) பொள்ளாச்சி - வால்பாறை சாலை முதல் ஜமீன்கோட்டாம்பட்டி வழி வஞ்சியாபுரம் சாலை (3.20 கி.மீ., நீளம்), ரங்கசமுத்திரம் முதல் மாக்கினாம்பட்டி சாலை (2.98 கி.மீ., நீளம்) கிராம சாலைகள், நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டன. துறை சார்ந்த அனுமதிக்கு பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அதற்கான அரசாணை பிறப்பிக்கப்படாமல் உள்ளதால், ரோட்டை விரிவாக்கம் செய்து, புதிய தார் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படாமல் உள்ளது. இந்நிலையில், மக்கள் நலன் கருதி, தற்போதைக்கு, 'பேட்ச்' பணி துவங்க உள்ளதாக, ஒன்றிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ