உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பட்டா மாறுதலுக்கு படாதபாடு: நடையாய் நடக்கும் பொதுமக்கள்

பட்டா மாறுதலுக்கு படாதபாடு: நடையாய் நடக்கும் பொதுமக்கள்

கோவை : நிலம், வீடு விற்பனை, இறப்பு, தானம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, பட்டா பெயர் மாற்றம் செய்ய மக்கள் விண்ணப்பிக்கின்றனர். இதற்கு முன் காகித ஆவணமாக வழங்கப்பட்ட பட்டா, தற்போது டிஜிட்டல் முறையில் இ-பட்டாவாக வழங்கப்படுகிறது. விண்ணப்பத்துடன் பட்டா, சிட்டா, அடங்கல், எப்.எம்.பி., ஸ்கெட்ச் உள்ளிட்டவற்றை, ஸ்கேன் செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் சரியாக இருந்தால், முதலாவதாக, கிராம நிர்வாக அலுவலர், இரண்டாவதாக வருவாய் ஆய்வாளர் சரிபார்த்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். பின், துணை தாசில்தார் மற்றும் சர்வேயர் ஒப்புதல் அளித்ததும், பட்டா மாறுதல் உத்தரவை தாசில்தார் வழங்குவது வழக்கம். கோவை மாவட்டத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலகங்களில் விண்ணப்பிக்கும் மக்களுக்கு, குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் பட்டா மாறுதல் செய்து வழங்கப்படுவதில்லை. விண்ணப்பதாரர்கள் நடையாய் நடக்கின்றனர். அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தாலும் ஒப்புதல் அளிக்காமல், கிடப்பில் போடுகின்றனர் அல்லது நிராகரித்து விடுகின்றனர். மீண்டும் விண்ணப்பித்து, ஒவ்வொரு அதிகாரியையும் கவனித்த பிறகே பட்டா மாறுதல் வழங்கப்படுவதாக, அவர்கள் குமுறுகின்றனர். ஜமாபந்தி நடத்தியும் கூட, இப்பிரச்னை தொடர்வதால், நிரந்தர தீர்வு காண கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

JCP
ஆக 26, 2025 15:20

பொது மக்களின் வயிற்றெரிச்சல் அத்தனை பதிவிடப்பட்ட கருத்துக்களிலும் வெளிப்படுகிறது. மத்திய அரசின் சிபிக்ராம்ஸ் தீர்வுகள் வழங்குகிறது. அதே சாயலில் இருக்கும் முதல்வரின் முகவரி வெறும் கண்துடைப்பு தான். மனு போட்டால் சும்மா அங்கே போ இங்கே போ அவரைப் பார் இவரைப் பார் என்று சுத்தி விட்டுகிட்டே இருப்பாங்க. அத்தனை பட்டும் நமக்கெல்லாம் இன்னும் அறிவு வரவே இல்லையே.... சும்மா இங்க புலம்பிட்டு போக வேண்டியதுதான்


Sathya Gold
ஆக 25, 2025 21:35

மக்களின் அவரவர்களின் சொத்தை சரிபார்த்து அதற்கான சான்று தர எதற்காக இத்தனை சங்கடங்கள் மக்களுக்கு... இதை எந்த அரசும் கண்டு கொள்வதாக தெரியவில்லை...


Sureshkumar Muthukrishnan
ஆக 25, 2025 10:28

25000 பெயர் மாற்றம் செய்வதற்க்கு


Gajageswari
ஆக 25, 2025 05:36

திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் தொழில் துவங்க நடையாக நடந்தாலும் முடியாது


R. THIAGARAJAN
ஆக 24, 2025 18:47

ஓரே தீர்வு மனு மற்றம் அதன் நகல்களை பாதுகாத்து திட்டமிட்டே முற்கேடாக நிராகரிக்கபடும் மனுதாரர்கள் தகவல் உரிமைக்கு விண்ணப்பிக்கவும் பின் துகர்வோர் நீதிமன்றம் அதற்க்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநில ஆளுநருக்கு புகார் அளிக்கவும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வமழிக்காட்டுதல் நலம் இல்லையேல் லஞ்சம் எனக்கருதினால் லஞ்ச ஓழிப்புத்துறை முயற்சிக்கலாம்.


Nava
ஆக 24, 2025 21:06

2014 ல் வாங்கிய வீட்டடி மனைக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டு தலைமியிடத்து துணை வட்டாட்சியர் அவர்களால் கையொப்பமிட்டப்பட்டு பட்டா வழங்கப்பட்டு உள்ளது ஆனால் கணனியில் ஏற்றாமல் விட்டுவிட்டார்கள் ஆனால் 2020 ல் தான் எனக்கு தெரியவந்தது ஆகையால் நான் வட்டாட்சியரிடம் மூன்று மனு கொடுத்து நடையாக நடந்தும் ஒன்றும் நடக்கவில்லை.மேலும் 2022 மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்து ஒன்றும் நடக்கவில்லை அதனை RTI மூலமாக விண்ணப்பித்து அப்பீல் வரை சென்று ஒன்றும் நடக்காமல் தகவல் ஆணையாளர் வரை சென்று விசாரணையின் போது தகவல் ஆணையாளரால் வட்டாட்சியரை கண்டித்தும் இதுவரை ஒன்றும் நடக்கவில்லை மேலும் நமது முதல்வன் போன்றவைகள் மூலமாகவும் முயற்சி செய்து பலன் இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்


Mani . V
ஆக 24, 2025 04:36

இதுவே டாஸ்மாக் வேணுமுன்னு கேட்டுப் பாருங்க. அன்றே நடக்கும். நீங்கள் நடக்கவே தேவையில்லை.


புதிய வீடியோ