உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிப்., கட்டணத்தையே இம்மாதமும் செலுத்துங்க!

பிப்., கட்டணத்தையே இம்மாதமும் செலுத்துங்க!

பொள்ளாச்சி; தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், அங்கலக்குறிச்சி கோட்டம், ஆனைமலை பிரிவுக்கு உட்பட்ட ஈஸ்வரன்கோவில், குப்புச்சிக்கவுண்டன்புதுார், அங்கலக்குறிச்சிப் பிரிவு குமரன்கட்டம் பகுதிகளில், தவிர்க்க இயலாத நிர்வாக காரணங்களால், இம்மாதத்துக்கான மின் கணக்கீடு மேற்கொள்ளப்படவில்லை.எனவே, இப்பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர்கள், பிப்., மாதத்திற்கான மின் கட்டணத்தையே, இம்மாதத்துக்கும் செலுத்த வேண்டும். இத்தகவலை, அங்கலக்குறிச்சி செயற்பொறியாளர் தேவானந்த் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி