உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பாதசாரிகளுக்கு தேவை பாதுகாப்பான நடைபாதை

 பாதசாரிகளுக்கு தேவை பாதுகாப்பான நடைபாதை

கோவை: பாதசாரிகளுக்கு பாதுகாப்பான நடைபாதை அமைத்து, போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதசாரிகளுக்குப் பாதுகாப்பான நடைபாதைகளே இல்லை. ஆக்கிரமிப்பு கடைகள், வணிக நிறுவனங்களின் விளம்பரப் பலகைகள், சட்டவிரோத வாகன நிறுத்தங்களை அகற்றுவதே தீர்வு. முக்கிய சந்திப்புகள், சிக்னல்களில் பாதசாரிகள் சாலையைக் கடப்பதற்கான முறையான வசதிகளும், நேர ஒதுக்கீடும் செய்ய வேண்டும். புதிய பாலங்கள் கட்டும் முன் தற்போதைய சாலைகளின் முழு அகலத்தையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ''குறுகலான சாலைகளை அகலப்படுத்த வேண்டும். இதன் வாயிலாக 50 சதவீதம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும். கோவைக்கு இரண்டு அமைச்சர்கள் கிடைத்துள்ளளனர். மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் புதிய அரசின் வழிகாட்டுதலோடு போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்,'' என்கிறார் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ