பேனா நண்பர்கள் சந்திப்பு கூட்டம்
கோவை: இந்திய பேனா நண்பர்கள் பேரவை சந்திப்பு கூட்டம், கோவை காந்திபுரத்தில் உள்ள ஓட்டலில் நேற்று நடந்தது. ஆண்டு முழுதும் கடிதம் வாயிலாக தொடர்பு கொண்டு நட்பை தொடரும் இந்த அமைப்பின் உறுப்பினர்கள், ஆண்டுக்கு ஒரு முறை நேரில் சந்தித்து உரையாடுவது வழக்கம்.இந்திய பேனா நண்பர்கள் பேரவை செயலாளர் கருண் கூறுகையில், ''நண்பர்கள் அனைவரும் குடும்பத்துடன் சந்தித்து உரையாடி, நட்பை பரிமாற, இந்த சந்திப்பு உதவுகிறது. இந்த அமைப்பு வாயிலாக சமூக சேவையும், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவியும் வழங்கி வருகிறோம்,'' என்றார்.