உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இலவச பஸ் பாஸ் வழங்க பென்சனர்கள் எதிர்பார்ப்பு

இலவச பஸ் பாஸ் வழங்க பென்சனர்கள் எதிர்பார்ப்பு

அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு திருப்பூர் கிளை சார்பில், பென்சனர் தின விழா, குமார் நகர், கருப்பராயன் கோவில் மண்டபத்தில் நடந்தது.கிளை தலைவர் லியாகத் அலி தலைமை வகித்தார். பொருளாளர் சுப்ரமணியம் வரவேற்றார். அமைப்பின் முன்னோடிகள் நகரா மற்றும் சாமிநாதன் ஆகியோர் படம் திறந்து வைக்கப்பட்டது. செயலாளர் வேலுசாமி ஆண்டறிக்கை வாசித்தார். மாநில தலைவர் ராஜண்ணன், நல்லாசிரியர் விருது பெற்றவர்களை கவுரவித்து பேசினார்.பழைய பென்சன் திட்டம் அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு போல் குறைந்தபட்சம், 9 ஆயிரம் ரூபாய் பென்சன், 20 ஆண்டு பணிக்கு முழு பென்சன் வழங்க வேண்டும்.மருத்துவப்படி ஆயிரம் ரூபாய்; கருணை தொகை, 40 சதவீதம் வழங்க வேண்டும். எண்பது வயதுடைய பென்சனர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விழாவில், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். வட்டார துணை தலைவர் இருதயராஜ் நன்றி கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ