மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
11-Jul-2025
கோவை,; தி.மு.க., அரசு கடந்த தேர்தலில், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என கோரி, தர்ணா போராட்டம் நடத்த போவதாக, தமிழ்நாடு ஓய்வூதியர் பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது.இது குறித்து, தமிழ்நாடு ஓய்வூதியர் பாதுகாப்பு இயக்கம் மாவட்ட தலைவர் பலராமன் கூறியிருப்பதாவது:தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுத்து, மூத்தகுடிமக்களை வஞ்சித்துள்ளது. அரசு ஊழியர்கள் வீதியில் நின்று, போராடி பெற்று தந்த ஓய்வூதியம் எனும் அடிப்படை உரிமையை, பறித்திட, ஆட்சியாளர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். எனவே நம் கோரிக்கைகளை நிறைவேற்ற, தமிழக அரசை வலியுறுத்தி, அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டி உள்ளது.கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, அரசு அளித்த வாக்குறுதிகளின் படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்-படுத்திட வேண்டும்.தமிழக சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியமும், ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச சட்டபூர்வ ஓய்வூதியமும், பணிக்கொடையும் வழங்கிட வேண்டும்.ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு, 70 வயது நிறைவடையும் போது, 10 சதவீதம் வீதமும், 80 வயது நிறைவடையும் போது, மேலும் 10 சதவீதமும் கூடுதலாக ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 29ம் தேதி கோவையில் தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
11-Jul-2025