உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காந்திமாநகரில் இரவானால் வெளியே செல்ல அச்சம் :தெருவிளக்குகள் எரியாததால் மக்கள் அவஸ்தை

காந்திமாநகரில் இரவானால் வெளியே செல்ல அச்சம் :தெருவிளக்குகள் எரியாததால் மக்கள் அவஸ்தை

விளம்பரங்களால் ஆக்கிரமிப்பு கோவை மாநகராட்சி, 60வது வார்டு, கோ- ஆப்பரேட்டிவ் காலனி, பெர்க்ஸ் வளைவு முதல் ஜி.வி. ரெசிடன்சி செல்லும் வழியில், கடைகளின் விளம்பரங்கள் சாலையை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். பாதசாரிகள் மற்றும் பைக்கில் செல்வோருக்கு, மிகவும் இடையூறாக உள்ளது. - லட்சுமி: சாலையில் கட்டப்படும் மாடுகள் சிங்காநல்லுார், 58வது வார்டு, விவேகானந்தா நகரில் உள்ள பிரதான தெருக்களில், நான்கு முனை சந்திப்புகளிலும் மாடுகளை, அதன் உரிமையாளர்கள் நீண்ட கயிறுகளால் கட்டி வைக்கின்றனர். திடீரென சாலையின் குறுக்கே வரும் மாடுகளால், வாகனஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். - அன்னபூரணி: சிங்காநல்லுார்.: தெருவிளக்கு பழுது காந்திமாநகர், 25வது வார்டு, செல்வ விநாயகர் கோயில் எதிர்புறம் உள்ள வீதியில், 'எஸ்.பி - 21, பி - 38' என்ற எண் கொண்ட கம்பத்தில், பல மாதங்களாக தெருவிளக்கு பழுதாகியுள்ளது. இரவு 7 மணிக்கு மேல், இப்பகுதியில் வெளியே செல்லவே சிரமமாக உள்ளது. - சிவதுருவன்: காந்திமாநகர்.: வாகனங்களால் இடையூறு சாய்பாபாகாலனியில் உள்ள சபாபதி தெரு, சர்ச் ரோடு மிகவும் குறுகியதாக உள்ளது. இந்த சாலையோரம் பைக், கார் போன்ற வாகனங்களை சிலர் நிறுத்திவைக்கின்றனர். பலமணி நேரம், நாட்கணக்கில் நிறுத்தப்படும் வாகனங்களால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. - ராஜா: சாக்கடை அடைப்பு புலியகுளம், 66வது வார்டு, சவுரிமுத்து லே-அவுட்டில் உள்ள சாக்கடை கால்வாய் சீரான இடைவெளியில் துார்வாருவதில்லை. கால்வாயில் குப்பை, கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதில், கொசுப்புழுக்கள் உற்பத்தியும் அதிகமாக உள்ளது. - வீரவேல்: புலியகுளம்.: விளக்குகளை மாற்றுங்க சின்னவேடம்பட்டி வழியாக, சத்தி ரோடு முதல் அத்திப்பாளையம் செல்லும் ரோட்டில், தெருவிளக்குகள் பழுதாகியுள்ளன. சாலையோரம் நடந்து செல்பவர்கள் மற்றும் பைக்கில் செல்வோருக்கு ஆபத்தாக உள்ளது. பழுதான தெருவிளக்குகளை சரிசெய்து தர வேண்டும். - கார்த்திக்: சின்னவேடம்பட்டி.: தெருவிளக்குகள் தேவை மதுக்கரை மார்க்கெட், பாலத்துறை ரோடு, மேபிள் கார்டன், பாலாஜி நகர் பகுதியில் தெருவிளக்குள் இல்லாததால், இரவு நேரங்களில் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதிகாரிகளிடம் கடந்த 10 ஆண்டுகளாக முறையிட்டும் எந்த பலனும் இல்லாததால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். - ராகுல்: அதிகரிக்கும் விபத்துகள் வடவள்ளி, 37வது வார்டு, சுப்பிரமணியம் நகரில் தெருவிளக்குகள் எரிவதில்லை. பணி முடிந்து வீடு திரும்பும் பெண்கள், முதியவர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். இரவு நேரங்களில் இப்பகுதியில் விபத்து அதிகரிக்கிறது. - வாணி: இருளால் சிரமம் ஜி.என்.மில்ஸ், சுப்பிரமணியன்பாளையம், 15வது வார்டு, சக்தி அவென்யூ விரிவாக்கம் பகுதியில், 'எஸ்.பி - 22 பி- 31' என்ற எண் கொண்ட கம்பத்தில், விளக்கு பழுதாகியுள்ளது. கடந்த ஒரு வாரமாக தெருவிளக்கு எரியாததால், குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். - லட்சுமி: ஜி.என்.: சேதமடைந்த சாலை உப்பிலிபாளையம், 60வது வார்டு, பி.ஆர். லே- அவுட் பகுதியில் சாலை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. பல இடங்களில் தார் பெயர்ந்து மண்ணாகவும், ஆழமான குழிகளாகவும் உள்ளது. மழைக்காலத்தில் இச்சாலையை பயன்படுத்தவே முடியவில்லை. - ஜேசுதாஸ்: உப்பிலிபாளையம்.: மோசமான ரோடு திருச்சி ரோடு முதல் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி, ஜெயேந்திரா பள்ளி மற்றும் கல்லுாரி சந்திப்பில் சாலை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. அடிக்கடி விபத்து நடப்பதால், சேதமடைந்த சாலையை சீக்கிரம் சீரமைக்க வேண்டும். - பாரதி: எஸ்.ஐ.எச்.எஸ்.:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை