மேலும் செய்திகள்
பழநி பஸ் 'பிரேக் டவுன் ' பஸ் ஸ்டாண்டில் நெரிசல்
12-Apr-2025
அன்னுார், ; பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே தாறுமாறாக நிறுத்தப்படும் பஸ்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என குறை தீர்ப்பு கூட்டத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.நல்லி செட்டிபாளையம், சமூக ஆர்வலர் கோபாலகிருஷ்ணன் நேற்றுமுன்தினம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு கூட்டத்தில் அளித்த மனுவில், 'அன்னுார் பஸ் ஸ்டாண்டின் முன்புறம் பஸ்கள் வெளியே செல்லும் பகுதியில், தாறுமாறாக பஸ்கள் நிறுத்தப்படுகின்றன.அவிநாசியில் இருந்து வரும் பஸ்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லாமல் பஸ் ஸ்டாண்டின் எதிர்ப்புறம் மேட்டுப்பாளையம் சாலையில் நிற்கின்றன. இதேபோல் மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னுார் வரும் பஸ்களும் பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லாமல் பஸ்கள் வெளியே வரும் இடத்தில் நிறுத்திக் கொள்கின்றன.இதுபோல் தாறுமாறாக நிறுத்தப்படும் பஸ்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதுகுறித்து அன்னுாரில் உள்ள அரசு போக்குவரத்து கழக கிளை அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. விழா காலங்களில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12-Apr-2025