உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மதுரை, திருச்சிக்கு பஸ் இயக்க மக்கள் கோரிக்கை

மதுரை, திருச்சிக்கு பஸ் இயக்க மக்கள் கோரிக்கை

வால்பாறை,; வால்பாறையிலிருந்து மதுரை, திருச்சிக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை அரசு போக்குவரத்துக்கழக கிளை சார்பில், பொள்ளாச்சி, கோவை, பழநி, சேலம், திருப்பூர், மன்னார்காடு மற்றும் எஸ்டேட் பகுதியில் உள்ள வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.வால்பாறையிலிருந்து வெளியூர்களுக்கு அதிகளவில் பஸ்கள் இயக்கப்படுவதால், உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் பயனடைகின்றனர். இதேபோல, மதுரை, திருச்சிக்கும் வால்பாறையிலிருந்து அரசு பஸ் இயக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.மக்கள் கூறியதாவது:வால்பாறையில் உள்ள எஸ்டேட்களில், திருச்சி, பழநி, மதுரை, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மூன்று தலைமுறைகளாக பணிபுரிகின்றனர். இவர்கள் சொந்த ஊர் செல்ல, 64 கி.மீ., பயணித்து பொள்ளாச்சி சென்று, வேறு பஸ்சில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், மக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.எனவே, மக்கள் நலன் கருதி வால்பாறையிலிருந்து, மதுரை, திருச்சிக்கு நேரடியாக பஸ்கள் இயக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை