உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிநீர் சப்ளையில் கழிவு நீர் கலந்ததால் பழையூர் மக்களுக்கு வயிற்றுப்போக்கு

குடிநீர் சப்ளையில் கழிவு நீர் கலந்ததால் பழையூர் மக்களுக்கு வயிற்றுப்போக்கு

கோவை: கோவை பாப்பநாயக்கன்பாளையம், பழையூர் பகுதியில் வசிப்போருக்கு சப்ளை செய்த குடிநீரில் கழிவு நீர் கலந்ததால், பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. எந்த இடத்தில் கழிவு நீர் கலந்தது என்பதை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.கோவை மாநகராட்சி, 49வது வார்டு பாப்பநாயக்கன்பாளையம் பழையூர், கந்தசாமி லே-அவுட் பகுதியில், தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிப்போருக்கு வயிற்றுப்போக்கு, காய்ச்சல் ஏற்பட்டது. பலர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றனர்.குடிநீரில் கழிவு நீர் கலந்திருக்கக் கூடும் என்கிற அச்சத்தில், மாநகராட்சி அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். பழையூரில் உள்ள அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மற்ற வீடுகளில் வசிப்போருக்கும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக, அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் மாதிரி சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பினர். அதில், குடிப்பதற்கு உகந்ததல்ல என, பரிசோதனை முடிவு வந்ததால், மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் முகாமிட்டு, அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போருக்கு சிகிச்சை அளித்தனர்.குடிநீர் குழாயில் கழிவு நீர் கலக்கும் பகுதியை, பொறியியல் பிரிவினர் தேடினர். கந்தசாமி லே-அவுட் பகுதியில் உத்தேசமாக ஒரு இடத்தை தேர்வு செய்து, குழாயை 'கட்' செய்து, இரு புறமும் தேங்கியிருந்த தண்ணீரை ஆய்வு செய்தனர். அப்பகுதியில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ