மேலும் செய்திகள்
படம் எப்டி இருக்கு | war 2 | Movie Review
15-Aug-2025
போத்தனுார்; சுந்தராபுரத்தில் இருந்து போத்தனுார் செல்லும் சாரதா மில் சாலையில், காந்திஜி சாலை சந்திப்பு எதிரே 'டாஸ்மாக்' மதுக்கடை (எண்: 1756) உள்ளது. இதன் அருகே உள்ள இடத்தில், எப்.எல்., 2 பார் அமைக்கும் பணி நடக்கிறது. இவ்விடத்தை பார்வையிட அதிகாரிகள் நேற்று வந்தனர். அவர்களிடம், அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், 'இதே பகுதியில் ஏற்கனவே செயல்படும் மதுக்கடையால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. அருகே கிளினிக் ஒன்றும் செயல்படுகிறது. பள்ளி வாகனங்கள் இவ்விடத்தில் நின்று, குழந்தைகளை ஏற்றி, இறக்கிச் செல்லும். சுற்றிலும் வீடுகள் இருப்பதால், பெண்கள் நடமாட்டம் எப்பொழுதும் இருக்கும். எப்.எல்., 2 பார் அமைத்தால், பொதுமக்களுக்கு மேலும் இடையூறு ஏற்படும்' என்றனர். அதைக்கேட்ட அதிகாரிகள், பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
15-Aug-2025