உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சேதமடைந்த ரோட்டில் அவதிக்குள்ளாகும் மக்கள்

சேதமடைந்த ரோட்டில் அவதிக்குள்ளாகும் மக்கள்

கிணத்துக்கடவு: சொக்கனூர் -- முத்துக்கவுண்டனூர் செல்லும் ரோடு, சேதமடைந்திருப்பதால் வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். கிணத்துக்கடவு அருகே உள்ள, சொக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட முத்துக்கவுண்டனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் முத்துமலை முருகன் கோவில் செல்லும் ரோடு பல மாதங்களாக சேதமடைந்த நிலையில் இருக்கிறது. இந்த ரோட்டில் தினமும் ஏராளமான பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாயிகள் சென்று வருகின்றனர். தற்போது, மழை பெய்வதால் சேதமடைந்த இந்த ரோட்டில், மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் நிலை தடுமாறி செல்கின்றனர். ரோட்டில் நடந்து செல்லும் பொது மக்களும் தடுமாறி விழும் நிலை உள்ளது. குறிப்பாக, இரவு நேரத்தில் பைக் ஓட்டுநர்கள் இவ்வழியில் செல்லும் போது தடுமாறி விழுகின்றனர். மேலும், இந்த ரோட்டில் டிப்பர் லாரிகள் வரும்போது எதிரே வரும் வாகனங்கள் ஒதுங்கி நிற்க முடியாத நிலை உள்ளது. இதனால், சஷ்டி உள்ளிட்ட விசேஷ நாட்களில் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் சிரமத்துடன் பயணிக்கின்றனர். எனவே, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இந்த ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ