உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  அக்காமலை ரோட்டில் பள்ளம் சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

 அக்காமலை ரோட்டில் பள்ளம் சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

வால்பாறை: அக்காமலை ரோட்டில் உள்ள பள்ளத்தால், விபத்து ஏற்படும் முன் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். வால்பாறையில் இருந்து, 10 கி.மீ., தொலைவில் அக்காமலை எஸ்டேட் அமைந்துள்ளது. இந்த எஸ்டேட் பகுதிக்கு வால்பாறை அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், பஸ் சென்று திரும்பும் ரோட்டில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. கழிவு நீர் கால்வாயில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த வழியாக வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கூறியதாவது: அக்காமலை ரோடு ஏற்கனவே சேதமடைந்த நிலையில், தற்போது திடீர் மண் அரிப்பு காரணமாக ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இருசக்கர வாகனங்கள் முதல் பெரிய வாகனங்கள் வரை இந்த ரோட்டில் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ரோட்டில் ஏற்பட்ட பள்ளத்தால், இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அக்காமலை எஸ்டேட்டில் பஸ் திரும்பும் இடத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை உடனடியாக சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ