வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இது சரியான நடவடிக்கையே. பயங்கரவாதிகள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு ஆதரவு தரும் பாகிஸ்தானுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்
கோவை: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 'ஆபரேசன் சிந்துார்' என்ற பெயரில், பயங்கரவாதிகளின் ஒன்பது முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி, அழித்திருக்கிறது. நமது நாட்டின் இந்நடவடிக்கையை வரவேற்கும் கோவை மக்கள், 'பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதை வேரறுக்க வேண்டும்' என, எதிர்பார்க்கின்றனர்.கோவை மக்கள் கூறிய கருத்துகள்:
நம் நாட்டின் மீதான அச்சுறுத்தலுக்கு, மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கையில் தவறில்லை. போர் வந்தால், நமது பொருளாதாரமும் பாதிக்கப்படும். பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையில் சாதுர்யமாக செயல்பட வேண்டும். உலகநாடுகளின் ஆதரவோடு, சுமூகமான முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காக, நாம் தாழ்ந்து போகக்கூடாது.- பாலகிருஷ்ணன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்'ஆபரேசன் சிந்துார்' என்ற பெயரில் நடத்தப்பட்ட தாக்குதல் மிகச்சரியானது. எத்தனையோ பெண்களின் வாழ்க்கை மற்றும் கண்ணீர் சிந்தப்பட்டிருக்கிறது. நம் நாட்டில் நடந்தபோது, அவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை. அங்குள்ள மக்களையோ, பெண்களையோ குறிவைத்து தாக்குதல் நடத்தவில்லை. நம் தாக்குதல், எதிர்காலத்தில் நம்நாட்டுக்கு கெடுதல் வரக்கூடாது என்ற எண்ணத்தில், பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் மீதே நடந்துள்ளது. 'மோடியிடம் சொல்லுங்கள்' என அவர்கள் கூறினார்கள். 'ஆம் நாங்கள் கூறி விட்டோம்' என்பதையே இந்த தாக்குதல் கூறுகிறது. நம் பெண்கள் கணவனை இழந்து வாடியதற்கு, இப்பதிலடி தேவை தான். போர் வந்தாலும், அதை சமாளிக்கலாம்.-கவிதா, ஆசிரியைபயங்கரவாதிகள் மீதான தாக்குதல் போதாது; இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். இஸ்ரேல் பாணியை இந்தியா பின்பற்ற வேண்டும். பஹல்காமில், 26 பேர் உயிரிழந்ததற்கு, பல பயங்கரவாதிகளை அழிக்க வேண்டும். நமது நாட்டின் பொறுமையை அவர்கள் சோதித்து விட்டனர். பயங்கரவாதம் முற்றிலும் ஒழியும் வரை நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானும் பயங்கரவாத நாடு தான். அதனால், அவர்கள் மீது எவ்வித கருணையும் தேவையில்லை.-ரகுராமன், நிறுவனர், அறம் அறக்கட்டளைநம் நாடு எப்போதும் அகிம்சையையே விரும்புகிறது. அதற்காக, பலமுறை பேச்சுவார்த்தைகள் வாயிலாக காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண முயற்சித்தது. பாகிஸ்தான் சரியான முறையில் பதில் அளிக்கவில்லை. இரு நாடுகளின் ராணுவத்துக்கு இடையிலான தாக்குதல்கள் வேறு. அப்பாவி பொதுமக்களை கொன்றதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நம் நாடு கொடுத்துள்ள பதிலடி சரியானதே. எந்தவொரு நேரத்திலும் பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.-சுப்ரமணியம், சமூக ஆர்வலர்இந்தியாவின் நடவடிக்கை முற்றிலும் சரியான ஒன்றே. பாகிஸ்தானில் மக்களுக்கு கட்டுப்படாத ராணுவ ஆட்சி நடக்கிறது. அங்கு மக்களாட்சி இல்லை. மக்களாட்சி உறுதியாக இருந்தால், அங்கு பயங்கரவாதிகளுக்கு இடமிருக்காது. வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதுபோல், நம் மீது பயங்கரவாதத்தை ஏவியதால், இன்று பாகிஸ்தானை பாதித்துள்ளது. தற்போது பாகிஸ்தானின் உட்கட்டமைப்பு சிதைந்துள்ளது. பயங்கரவாதத்தை வளர்த்தால் அழிவை தரும்.-கனகராஜ், துணை முதல்வர், அரசு கலைக் கல்லுாரிநமது ராணுவத்தின் நடவடிக்கை வரவேற்புக்குரியது. நேருக்கு நேர் நின்று மோதாமல் அப்பாவி சுற்றுலா பயணிகளை சுட்டுக் கொன்றதை ஏற்றுக் கொள்ள முடியாது. நமது தாக்குதலை போராக கொண்டு செல்லாமல், துாதரக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். போர் என்றால், இருபக்கமும் பாதிப்பு இருக்கும். பயங்கரவாதிகளை ஒழிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.-மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு
இது சரியான நடவடிக்கையே. பயங்கரவாதிகள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு ஆதரவு தரும் பாகிஸ்தானுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்