மேலும் செய்திகள்
தாழ்வாக செல்லும் மின் ஒயரால் விபத்து அபாயம்
20-Sep-2024
கோவை: சொக்கம்புதுார் பகுதியில் உள்ள ஜெனரேட்டர் குடோனில், ஒயர் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். வடவள்ளி, ராஜமாதா நகரை சேர்ந்தவர் கோபிநாத், 50. இவர் ஜெனரேட்டர் மற்றும் ஆடியோ உபகரணங்கள் வாடகைக்கு கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். பொருட்களை சொக்கம்புதார் எஸ்.ஆர்.எஸ்., லே அவுட் எதிரில் உள்ள குடோனில் வைத்துள்ளார்.இந்நிலையில், கடந்த 12ம் தேதி இரவு இவரின் குடோனில் இருந்து சுமார், 100 மீட்டர் 125 கே.வி.ஏ., கேபிள் ஒயர்கள் திருட்டு போனது. இது குறித்து செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரித்த போலீசார், கேபிள் ஒயர்களை திருடிய சொக்கம்புதுாரை சேர்ந்த அகிலேஷ், மேலும் அவர்கள் திருடிச்சென்ற ஒயர்களை மீட்டனர்.
20-Sep-2024