உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எச்சரிக்கையை மீறும் மக்கள்

எச்சரிக்கையை மீறும் மக்கள்

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், எச்சரிக்கை அறிவிப்பை மீறி குப்பை குவிக்கப்படுகிறது. கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர், 3வது வீதியில் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில், மக்கள் குப்பை கொட்டி வந்ததால், அங்கு கடும் துர்நாற்றம் வீசியது. குப்பையை அகற்ற வேண்டி, பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் அந்த இடத்தை சுத்தப்படுத்தினர். மேலும், குப்பை கொட்டாமல் இருக்க பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை கொட்ட கூடாது என, எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. ஆனால், அண்ணா நகர் ஒரு பகுதி மற்றும் செம்மொழி கதிர் நகர் பகுதியை சேர்ந்த சிலர், இரவு நேரத்தில் பைக்கில் வந்து குப்பையை வீசி செல்கின்றனர். இங்கு குப்பை கொட்டுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை