உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஏழைகளுக்கு வீடு, மெட்ரோ ரயில் நகர வளர்ச்சிக்கு உதவும் பட்ஜெட் குறித்து மக்கள் கருத்து

ஏழைகளுக்கு வீடு, மெட்ரோ ரயில் நகர வளர்ச்சிக்கு உதவும் பட்ஜெட் குறித்து மக்கள் கருத்து

அடுத்த ஐந்தாண்டுகளில், கிராமப்புற ஏழை மக்களுக்கு இரண்டு கோடி வீடுகள் கட்டி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, வீடு இல்லாதவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான விசயம். மெட்ரோ ரயில் திட்டங்கள் மேலும் பல நகரங்களுக்கு விரிவுபடுத்துவது நகரங்கள் வளர்ச்சி பாதையில் செல்ல உதவும். ஆன்மிக சுற்றுலாவுக்கு பல்வேறு திட்டம் செயல்படுத்த உள்ளது வரவேற்க தக்கது. ---என்.கவுதமன் வக்கீல், வீரகேரளம்.ஒரு கோடி வீடுகளின் மொட்டை மாடிகளில், சோலார் பேனல் அமைக்கும் திட்டத்தின் வாயிலாக, 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது வரவேற்கதக்கது. மின்சார பற்றாக்குறை போக்க இத்திட்டம் உதவியாக இருக்கும். தனிநபர் வருமான உச்சவரம்பு உயர்த்தாதது ஏமாற்றம் அளிக்கிறது. விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு, தனிநபர் வருமான உச்சவரம்பை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி இருக்கலாம். ஏழை மக்கள் பயன்பெற, முன்பதிவு ரயில்களில்,கூடுதலாக பொதுப்பெட்டிகள் இணைக்க வேண்டும்.-ஆர்.ராஜ்குமார் வக்கீல், சிங்காநல்லுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ